Monday 13 June 2016

விநாயகர் சரண மாலை

விநாயகர் சரண மாலை

அருளே சரணம்! அன்பே சரணம்!
அன்னை மீனாள் மகனே சரணம்!
இருளைப் போக்கி ஒளியைச் சேர்க்கும்
ஈசன் மகனே சரணம்! சரணம்!
உருகிப் பணியும் அடியார் மனதில்
ஒளிரும் ஞானச் சுடரே சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!


திருவே சரணம்! தெளிவே சரணம்!
திகழும் யோக வடிவே சரணம்!
கருவாய் விளங்கிக் கவிஞர் மனதில்
கவியாய்ச் சுரக்கும் தமிழே சரணம்!
அருவம் உருவம் இவைகள் கடந்த
அருளே உயிரே சரணம்! சரணம்!
அருகப் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!


அழகன் மருகன் முருகன் போற்றும்
ஆனை முகனே சரணம்! சரணம்!
கழல்கள் அதிரக் களித்தே ஆடும்
காளித் தாயின் சுதனே சரணம்!
திருவாம் ஈசன் பாதம் பணியும்
தெய்வக் களிறே சரணம்! சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!


உழலும் மனிதர் நலமாய் வாழ
உன்னத அருளைத் தருவாய் சரணம்!
மழையைப் போல கருணைப் பொழிந்து
மங்களம் அருள்வாய் சரணம்! சரணம்!
தருவாய் உந்தன் அருளை என்றுன்
தாள்கள் பணிந்தேன் சரணம்! சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!


ஊழின் வினையும் உலகத் துயரும்
ஒருங்கே ஒழிய அருள்வாய் சரணம்!
வாழி என்றுன் பதங்கள் பணிந்தோம்!
வந்தே நலங்கள் தருவாய் சரணம்!
தருமி போலத் திரியும் எனக்கும்
தமிழைத் தருவாய் சரணம்! சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம் சரணம்!


மலரே! மணமே! மனதுள் அருளே!
மலையே! மடுவே! மகிமை ஒளியே!
அலையே! கடலே! அடங்காப் புயலே!
அன்பில் தாயே! அருமைச் சேயே!
நிலையாய் விளங்கும் நீதிக் கனலே!
நெகிழும் பக்தர் விழியின் நீரே!
அருகம் புல்லைச் சூடி மகிழும்

அன்பே அருளே சரணம்! சரணம்!  



    சித்தி விநாயகர் பதிகம் - (count: 1)

    • உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
    • இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
    • திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
    • விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
    • கணேசத் தனித் திருமாலை - (count: 1)

      • உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
      • கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
      • திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
      • இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே.

      No comments:

      Post a Comment